Ta:NeMo-Openweb
நீமோ கட்டுரை தளம்
ஓபன் வெப் என்றால் என்ன?
கட்டுரை தளம் செல்ல | முகப்பு
ஆசிரியர்
துவாரக் (Dwarak)
மொழிபெயர்ப்பாளர்கள்
ஆரிஷ் ரமேஷ் (Aarish Ramesh)
கௌதம்ராஜ் (Gauthamraj Elango)
ஓபன் வெப்
ஓபன் வெப் என்ற ஆங்கிலச் சொற்களின் நேரடி மொழி பெயர்ப்பு திறந்த வலை இணையம் என்பதாகும். தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சிக்கலாக இருப்பதனால் நாம் ஓபன் வெப் என்றே மனதில் கொள்வோம்.சரி...! வெப் என்பதனை தமிழில் இணையம் என்றும் ஆங்கிலத்தில் internet என்றும் அழைப்பர். இணையத்தை பற்றி இன்றளவில் பெரிதாய் சொல்வதற்கில்லை. அனைவரும் அறிந்ததே ! இதில் என்ன ஓபன் வெப்?
நாம் இணையத்தில் பெரும் அனுபவத்தை நமக்கேற்றவாறு மாற்றியமைக்கும் திறனை அளிப்பதே ஓபன் வெப். இதைப்பற்றி சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். பலரும் “நாம்நினைத்த நேரம், உலகில் எவருடனும் எளிதாய் பேச முடிகின்றது. வேண்டிய தகவலை உடனுக்குடன் பெற முடியும். நமக்குத் தேவையான அனைத்தும் ஒரு கை சொடுக்கில் பெறயியலுகிறது. என்னைப் பொருத்தவரை இணையம் திறந்த வலையே !”என்றேகூறினர்.
நாம் இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்க்கும்போது இந்த வெளிப்படையான இயல்பினை மட்டும் வைத்து இணையத்தை ‘ஓபன்’ என்று கருதமுடியாது. ஏனெனில், இணையத்தை இயங்கவைக்கும் மென்பொருள் தொகுப்புகள் மற்றும் வழிமுறைகள் மக்களிடமிருந்து மறைவாகவே வைக்கபடுகின்றது. இச்செயற்பாடு, மக்களுக்கு தாம் நினைத்தவாறு இணையத்தை மாற்றியமைக்கும் உரிமையை அளிப்பதில்லை. இதை சற்றே விரிவாகப் பார்ப்போமா ?
1990 ஆம் ஆண்டு, உலக வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். அப்பொழுதே, இணையம் பொது மக்களின் உபயோகத்திற்கு திறக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் வெளிவந்த வலைத்தளங்களின் மூல குறியீடுகளை (ஆங்கிலத்தில் CODE என்று அழைப்பர்) எவரேனும் எளிதாய் பார்க்க முடியும். பின்னர் வந்த வலைத்தளங்கள் முன்னர் அமைக்கப்பட்ட தளங்களின் மூல குறியீடுகளையே பின்பற்றின. இதுவே இணையம் வேகமாக வளர காரணமாய் அமைந்தது. ஆனால், காலப்போக்கில், இணைய தொழில்நுட்பங்களின் கட்டமைப்பு, மக்களிடமிருந்து மறைவாக வைக்கப்பட்டது.
குறுகிய காலத்திலேயே புதுப்புது வகையான தொழில்நுட்பங்கள் இணையத்தில் தென்பட தோன்றிவிட்டன. அவற்றில் பல, ஏதோ ஒரு நிறுவனத்திற்கு சார்ந்தவை. உதரணமாக, நாம் இணையத்தில் பார்க்கும் வீடியோ அல்லது ஒளிக்கட்சிக்கு ‘பிளாஷ்’ எனப்படும் தொழில்நுட்பம் மிக அவசியம். இத்தொழில்நுட்பம், ‘அடோப்’ நிறுவனத்தின் படைப்பு. ஆனால், ‘பிளாஷ்’ தொழில்நுட்பத்தின் வரைமுறைகள், மக்களிடமிருந்து மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, நிறுவனங்கள், தாம் கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை, தம்முடனேயே வைத்துகொள்கின்றன. இதனால், ஒரு தொழில்நுட்பம் மக்களுக்கு கிடைக்கலாமா இல்லை கூடாதா என்ற முடிவு மக்களிடமில்லை, அந்நிறுவனத்திடமே உள்ளது. மேலும், கண்டுபிடித்த அத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியிலும் மக்களால் பங்களிக்க முடியாமல் போய்விடுகின்றது. மாறாக, அதை பகிரங்கப்படுதினால், பலரின் பங்களிப்பு, அதன் தீவிர வளர்ச்சி மற்றும் நூதனதிற்கு வழி காட்டும். எல்லா மக்களுக்கும் அதன் மகத்துவம் மற்றும் அதன் வளர்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கும். இதுவே ‘ஓபன் வெப்’ மூலம் நாம் அடையும் ஒப்பில்லா பலனாகும்.
ஆகையினால், இந்நிலை தொடர்ந்தால், பின்வரும் ஆண்டுகள், இணையம் வடிவமைவதில், பொதுமக்கள், நம் குரலும், உரிமையும், பங்கும் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும். இதைத்தவிர்க்க, இப்பொழுதே, முயற்சிகள் எடுத்தாக வேண்டியுள்ளதால் மொசில்லாவுடன் இணைவோம் நமக்கென ஓபன் வெப்பை படைப்போம்.